Thursday, 9 May 2019

அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் திட்டம் ஏன் இதுகாறும் நிறைவேற்றப்படவில்லை?

ஐந்தாண்டுக்கு முன்பு டெலிகாம் கூட்டுறவு சொசைட்டி யின் RGB உறுப்பினர் தேர்தல் நடைபெற்ற போது NFTE கூட்டணி வெள்ளானூர் நிலத்தில் சகாய விலையில் தரமான அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டு உறுப்பினர்களுக்கு வினியோகிக்கப்படும் என்ற வாக்குறுதியை அளித்தது. NFTE கூட்டணியின் வரலாறு காணாத வெற்றிக்கு இந்த உறுதிமொழி மிகவும்
முக்கிய காரணம். எனவே தான் புதிய இயக்குனர் குழு தோழர் வீரராகவன் தலைமையில் பொறுப்பேற்றதும் அடுக்கு மாடி குடியிருப்பு கட்டும் பணியை துவங்கியது. இது ஒரு பிரம்மாண்டமான திட்டம் என்பதால் துவக்கப் பணிகளை இறுதியாக்கவே ஓராண்டானது. பின்னர் CMDA வின் ஒப்புதலுக்காக கோப்புகள் அனுப்பி வைக்கப்பட்டன. CMDA ஒப்புதல் தருவதற்கு ஓராண்டுக்கு மேல் இழுத்தடித்தது. இயக்குனர் குழுவின் இடைவிடா முயற்சியால் கோப்புகளின் பரிசீலனை வேகம் பிடித்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக நமது நிலத்தின் மீது உரிமைக் கோரி மூன்று சிவில் வழக்குகள் நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி CMDA அடுக்கு மாடி குடியிருப்பு கட்டுவதற்கு ஒப்புதல்/ அனுமதி அளிக்க மறுத்து விட்டது. நிலுவையில் இருக்கும் நீதிமன்ற வழக்குகளை தள்ளுபடி செய்ய இயக்குனர் குழு எடுத்த எல்லா முயற்சிகளும் சட்டச் சிக்கல் காரணமாக இன்றுவரை வெற்றிப் பெறவில்லை.
நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள காலம் வரை CMDA நமது அடுக்கு மாடி குடியிருப்பு கட்டும் திட்டத்திற்கு அனுமதி அளிக்காது என்பதே இன்றுள்ள யதார்த்தமான நிலை. நமக்கு இந்நிலை வருத்தம் தந்தாலும் நீதிமன்றங்களுக்கு எவரும் ஆணையிட முடியாது. வழக்குகள் ஆமை வேகத்தில் நடக்கின்றன. இதற்கிடையில் வழக்கு கொடுத்தவர்களுடன் சமரச உடன்பாடு காணவும் நமது இயக்குனர் குழு பெரும் முயற்சிகளை எடுத்தது. ஒருவேளை சமரசம் ஏற்பட்டு எதிர்மணுதாரர்கள் தங்களின் நீதிமன்ற வழக்குகளை வாபஸ் பெற்றுவிட்டால் CMDA வின் அனுமதி நமக்கு கிடைப்பது எளிதாகும். ஆனால் இதற்காக நம்மிடம் அவர்கள் எதிர்பார்த்த Compensation தொகையோ மிக மிக அதிகம். சுருக்கமாக சொன்னால் பல கோடி ரூபாயை அவர்கள் Compensation கேட்டார்கள். அவர்களின் ஆசையை நம்மால் ஒருபோதும் பூர்த்தி செய்ய இயலாது. இந்த பின்னணியில் தான் அடுக்கு மாடி குடியிருப்பு கட்டும் திட்டம் முடங்கிக் கிடக்கிறது. 
புதுடில்லியில் NFTE யின் சொந்த கட்டிடமான தாதா கோஷ் பவன் தனக்கு தான் சொந்தமானது என தனிச் சங்கம் துவங்கிய  BSNLEU உரிமைக் கோரி டில்லி 
நீதிமன்றத்தில் தொடுத்த நியாயமற்ற வழக்கு பல ஆண்டுகளாக இன்றுவரை நிலுவையில் தான் உள்ளது. சிவில் வழக்குகளின் கதி இது தான். ஏன் அயோத்தியில் சர்ச்சைக்குரிய பாபர் மசூதி அமைந்திருந்த நிலம் சம்பந்தப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இன்று வரை தீர்வு ஏற்படாமல் இழுத்தடிக்கப்படு  நிலுவையில் உள்ளது. 
   CMDA அனுமதி இல்லாமல் அடுக்கு மாடி குடியிருப்பு வளாகத்தைக் கட்ட எவராலும் இயலாது. எனினும் நமது விடா முயற்சி தொடர்கிறது.தோழர்கள் நமது நேர்மையான முயற்சிகளை சந்தேகிக்க கூடாது என பணிவுடன் வேண்டுகிறேன்.
சி.கே.எம்.

No comments:

Post a Comment