Tuesday, 7 May 2019















தொழிலாளர் கல்வி மையத்தின் மாநில மாநாடு
தூத்துக்குடியில் மே 4-5
தேதிகளில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
தேசியக்கொடியினை கரூர் தோழர் P.சுந்தரம் ஏற்றினார்.
மேதின தியாகிகளுக்கு
அஞ்சலி
தோழர் K.M. இளங்கோவன்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் 
திரு.த.வெள்ளையன் துவக்கயுரையாற்றி மாநாட்டில்
கல்வி உதவித்தொகை பெற வந்திருந்த ஒரு ஒப்பந்த தொழிலாளரின் மகனை‌ மேடைக்கு அழைத்து கெளரவித்தது ஒரு நெகிழ்வான நிகழ்வாக அமைந்தது.
மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் C.K.மதிவாணன்
வேலையறிக்கை மற்றும் அமைப்பு விதிகளை அறிமுகம் செய்து உரையாற்றினார். முதல்நாள் நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றன.

நிறைவாக முடிவுற்ற மாநில மாநாடு:
இரண்டாம் நாள் காலை துவங்கிய மாநாடு காலை10 மணிக்கு தோழர் சி கே எம் யின் எழுச்சியுரையுடன் துவங்கியது.  
11மணிக்கு
கருத்தாழம் மிக்க பட்டிமன்றம் ஒன்றும் நடைபெற்றது. இதில் தோழர்கள் காமராஜ், பூபதி, அன்பழகன், சுப்பராயன், சண்முகம், அசோக்குமார் ஆகியோர் மிகச் சிறப்பாக வாதித்தனர். தமிழ் தேசிய விடுதலை முன்னணி பொதுச் செயலாளர் தியாகு நடுவராக இருந்து அற்புதமான உரை நிகழ்த்தினார்.  
மாலை    ஒருமனதான நிர்வாகிகள் தேர்வுடன் நிறைவுற்றது. இறுதி நிகழ்ச்சியாக மாமேதை கார்ல் மார்க்ஸ் அவர்களின் 202 வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் NFTCL மாநில சங்கத்தின் MMKM Educational Trust சார்பில் 14 ஏழை மாணவர்களுக்கு கல்வி நிதியுதவி வினியோகிக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் நமது நிறுவனத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களின் பிள்ளைகள் என்பது குறிப்பிடத்தக்கது.   

இறுதியில் 71 தோழர்கள் உள்ளடங்கிய மாநில பொதுக்குழு தேர்வு செய்யப்பட்டது. 25 பேர் கொண்ட மாநில செயற்குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. 15 பேர் மாநில நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். 
மாநில தலைவர்:
எஸ். பாபநாசம்
பொதுச் செயலாளர்:
சி.கே.மதிவாணன்
துணைப் பொதுச்செயலாளர்:
எஸ்.காமராஜ்
தலைமையக செயலாளர்:
கே.எம். இளங்கோவன்
மாநிலப் பொருளாளர்:
எல்.சுப்பராயன்.
தணிக்கை குழு:
1. தோழர் என். கணேசன்
2. தோழர் எம். தனுஷ்கோடி
3.தோழர் டி. சோலை ராஜ்.
மிகக் குறுகிய அவகாசத்தில் சிறப்பாக மாநில மாநாட்டை நடத்திய தூத்துக்குடி தோழர்கள் பாலகண்ணன் மற்றும் கலாசெல்வம் உள்ளிட்ட அனைத்து தோழர்களுக்கு   நன்றி.

No comments:

Post a Comment