Thursday, 9 May 2019

டெலிகாம் கூட்டுறவு சொசைட்டி பிரச்சினையில் நீலிக் கண்ணீர் (முதலைக்கண்ணீர்)உகுப்பவர்களின்  உண்மையான நோக்கம் என்ன ?

மே-27 அன்று தற்பொழுதைய இயக்குனர் குழுவின்
ஐந்தாண்டு பதவிக் காலம்  நிறைவடைவதால் கூட்டுறவுச் சங்கத்திற்கு தேர்தல் நடைபெறவுள்ளது.எனவே வழக்கம் போல சில சங்கங்கள் தமது புளுகு பிரச்சாரத்தை தேர்தலில் ஆதாயம் பெற அவிழ்த்து விடுகின்றனர்.கூட்டுறவு சொசைட்டி யின் முன்னாள் துணைத் தலைவரும் ( ருசிகண்ட பூனையுமான) BSNLEU சங்கத்தைச் சார்ந்த ஒருவர் மறுபடியும் கூட்டுறவு சொசைட்டி மீது வழக்கு தொடுத்துள்ளார். இவர் தவிர வேறு சிலரும் கூட தனித்தனியாக வழக்கு கொடுத்துள்ளனர்.வெள்ளானூர் நிலவிற்பனை சம்பந்தமான இந்த வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் அது குறித்து நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கும் வரை பிறர் கருத்து தெரிவிப்பது நீதிமன்ற அவமதிப்பு குற்றமாக கருதப்படும் என்பதால் நாம் அதுகுறித்து தற்பொழுது கருத்து பதிவிட விரும்பவில்லை. என்றாலும் உறுப்பினர்களை பாதிக்கும்- அன்றாடம் அலைக்கழிக்கும் சில முக்கிய அம்சங்கள் குறித்து விளக்குவது நமது கடமையாகிறது. 
     முன்பு போல் ஏன் கேட்டவுடன் கடன் கிடைப்பது இல்லை ?
     கூட்டுறவு சொசைட்டி உறுப்பினர்களுக்கு கடன் வழங்குவதற்காக வங்கிகளில் அது பெருந் தொகையை  கடனாக பெறும். மாதந்தோறும் உறுப்பினரின் சம்பளத்தில் BSNL நிறுவனத்தால் பிடித்தம் செய்யப்படும் தொகையையும் உறுப்பினர்களுக்கு கடன் வழங்க சொசைட்டி பயன்படுத்திக் கொண்டது. இப்போது இந்த இரண்டு வழிகளிலும் தடைகள் ஏற்பட்டுள்ளன. சொசைட்டிக்கு எதிராக வழக்கு கொடுப்பவர்கள் உள்நோக்கத்துடன் முதலில் வழக்கு குறித்த தகவலை டெலிகாம் சொசைட்டிக்கு கடன் தரும் வங்கிகளுக்கு தெரிவிக்கின்றனர். இதன் விளைவாக சம்பந்தப்பட்ட வங்கிகள் கடன் தொகை வழங்கிட தயக்கம் காட்டுகின்றன. தாமதம் செய்கின்றன. இந்த நுணுக்கம் தெரிந்த முன்னாள் CEO தான் இப்போது BSNLEU சங்கத் தலைமைக்கு சட்ட ஆலோசகராக (?) செயல்படுகிறார். அவரது முறைகேடுகளாலும்- ஊழலினாலும் தான் சொசைட்டியின் நிதிநிலை சீரழிந்தது என்பது அனைவருக்கும் தெரிந்த செய்தியே. இப்படிப்பட்ட திறமைசாலி (!)க்கு  அவர் விரும்பிய பணிஓய்வுக்கு பிறகு இரண்டாண்டு பணிநீட்டிப்பு நமது ஆலோசனையால் மறுக்கப்பட்டது. அதனால் ஆத்திரமுற்ற அவர் தற்போது சரணடைந்திருப்பது BSNLEU சங்கத் தலைமையிடம் தான். எதிரிக்கு எதிரி நண்பன் என்ற எண்ணத்தில் அவர் BSNLEU சங்கத்தினருடன் கூடிக் குலாவுகின்றார். விசாரணை என்று ஒன்று நடந்தால் முதலில் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ள இவரின் துணையுடனும் - ஊழல் செய்வது எனது பிறப்புரிமை என ஓங்கிஒலிக்கும் வேறு ஒரு பிரபல(?) ஆசாமியின் உதவியுடனும் தான் BSNLEU சங்கம் ஊழலை ஒழிக்க போராடுவதாக மார்தட்டுவது  பரிதாபத்துக்குரிய- வேதனைக்குரிய நிலை.ஒருபுறம் நீதிமன்ற வழக்குகள் மூலம் வங்கிகளிடமிருந்து சொசைட்டிக்கு கிடைக்க வேண்டிய கடன் தொகையை தடுத்து நிறுத்தி விட்டு மறுபுறத்தில் அப்பாவி உறுப்பினருக்கு கடன் கிடைப்பதில் தாமதமாகிறதே - சொசைட்டியிலிருந்து வெளியேறியவர்களுக்கும் - நிறுவனத்திலிருந்து பணிஓய்வில் பெற்றவர்களுக்கும் நியாயமாக கிடைத்திருக்க வேண்டிய தொகை கிடைப்பது தாமதமாகின்றதே என்று‌ நீலிக் கண்ணீர் வடிக்க BSNLEU தலைவர்களால் மட்டுமே இயலும். ஏனெனில் பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவதில் அவர்கள் சமர்த்தர்கள்.தொழிற்சங்க  அங்கீகாரத்தை மட்டுமே அனுபவித்துக் கொண்டு ஊழியரின் பிரச்சினைகளை தீர்க்காமல் - ஊதிய மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளை கோட்டை விட்டு விட்டு மெளனவிரதம் இருக்கும் இந்த புரட்சிக் காரர்கள் இப்பொழுது நமது ஊழியர்கள் அவர்களின் தோல்விகளை மறந்திடவே டெலிகாம் சொசைட்டியை பாதுகாக்க குரல் எழுப்புவதாக நாடகம் ஆடுகிறார்கள். முதலில் அச்சங்கத்தினர் ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும்- பிஎஸ்என்எல் நிறுவனத்தை பாதுகாக்கவும் முதலில் 
செயலில் இறங்கட்டும். 
   மற்றொரு முக்கிய பிரச்சினை பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் தொகை சொசைட்டி டிமாண்ட் செய்யும் தொகையில் பாதி தொகை தான் சொசைட்டிக்கு கிடைக்கிறது. Society Demand செய்த தொகைக்கும் அதற்கு நிறுவனம் பிடித்தளிக்கும் Actual தொகைக்கும் உள்ள இடைவெளி மாதந்தோறும் பல கோடி ரூபாய். இதற்கு முக்கிய காரணம் முன்னாள் CEO லஞ்சம் பெற்றுக் கொண்டு வழங்கிய பல தவறான விதிகளை மீறிய கடன்கள் தான். இப்படி முப்பது கோடி ரூபாய்க்கு மேல் வராக்கடனாக தேங்கி நிற்கிறது. கடந்த ஆறு மாதங்களாக  பிஎஸ்என்எல் நிறுவனமே நிதி நெருக்கடியில் தள்ளாடுவதால் ஊழியரிடம் பிடித்தம் செய்யப்பட்ட மிகக் குறைவான தொகையைக் கூட BSNL நிறுவனம் பல மாதங்களாக ஒப்படைக்காத அவலம் தொடருகிறது. இந்த மிக நெருக்கடியான நிதிநிலையின் காரணமாகவே தற்காலிகமாக சொசைட்டியில் உறுப்பினருக்கு கடன் வழங்குவதிலும் - கணக்கு முடித்தவர்களுக்கு தொகையை தருவதிலும் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இயக்குனர் குழுவின் தீவிர மாற்று நடவடிக்கைகள் மூலம் இத்தகைய சூழல் விரைவில் சீராகும் என எதிர்ப்பார்க்கிறோம். வீடு பற்றி எறியும் போது நெருப்பை அணைப்பதற்கு சிறுதும் உதவாமல் தேர்தலில் ஆதாயம் பெற BSNLEU நமது ஊழியரிடம் நடத்தும் பொய்ப் பிரச்சாரம் ஒரே போதும் எடுபடாது.
 சி.கே.எம்....

No comments:

Post a comment