Monday, 20 May 2019

நேற்று (19-05-19) தமிழ்நாடு மற்றும் சென்னை தொலைபேசி NFTE, FNTO,TEPU மற்றும் SEWA சங்கங்களைச் சேர்ந்த மாநில மற்றும் அகில இந்திய தலைவர்கள் சென்னையில் தோழர் சி.கே.எம் அவர்களின் தலைமையில் ஒன்றுகூடி எதிர்வரும் டெலிகாம் கூட்டுறவு சொசைட்டி தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினர். இதில் மூத்த தலைவர்கள் P.N.பெருமாள்(SEWA), S.லிங்கமூர்த்தி (FNTO) மற்றும் தோழர்கள் J.விஜயகுமார்( TEPU), ஜெயபாலன் ( FNTO) , P.சண்முகம்( NFTE), K.M.இளங்கோவன்( NFTE) ஆகியோருடன் முன்னாள் NFTE சம்மேளனச் செயலாளர் S.S.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான சங்க முன்னோடிகள் திரளாக பங்கேற்றனர். டெலிகாம் கூட்டுறவு சொசைட்டியின் தலைவர் S.வீரராகவன், துணைத் தலைவர் K. ரகுநாதன், பொருளாளர் திருசங்கு மற்றும் பல இயக்குனர் பங்கேற்றனர். கர்னாடக மாநிலத்தில் இருந்து NFTE பெங்களூர் மாவட்ட துணைச் செயலாளர் நாகராஜன் மற்றும் கோலார்/ மைசூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து பல தோழர்களும் கூட இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். நான்கு மணி நேர விவாதத்திற்கு பிறகு கீழ்க்கண்ட முடிவுகள் ஒருமனதாக எடுக்கப்பட்டன. 
1. எதிர்வரும் டெலிகாம் கூட்டுறவு சொசைட்டி தேர்தலில் 2014 ல் அமைந்த வெற்றிக் கூட்டணியை அப்படியே தொடர்வது.
2. பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள கடும் நிதி நெருக்கடி மற்றும் நீதிமன்ற‌ வழக்குகள் காரணமாக தற்காலிகமாக வங்கிகளில் கிடைத்திருக்க வேண்டிய கடன் தாமதமானதால் உறுப்பினர்களுக்கு ஏற்பட்டுள்ள சங்கடங்களை விரைவில் அகற்ற துரித நடவடிக்கைகளை இயக்குனர் குழு எடுக்க வேண்டும்.
3. சென்றமுறை நடந்த சொசைட்டி தேர்தலில் படுதோல்வியை தழுவிய BSNLEU சங்கம் காழ்ப்புணர்ச்சி மற்றும் தீய நோக்கத்துடனும் சமீபகாலமாக நடத்திவரும் அவதூறு / பொய்ப் பிரச்சாரத்தை முறியடிக்க சொசைட்டி நிர்வாகம் உடனடியாக உறுப்பினர்களுக்கு உண்மை நிலவரத்தை தெரிவிக்க வேண்டும். 
4. கடந்த காலங்களில் ஊழல்/ முறைகேடுகளில் ஈடுபட்டு சொசைட்டியின் வராக் கடன் பெருகக் காரணமான சில சுயநலவாதிகள் BSNLEU சங்கத்துடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு நமது டெலிகாம் கூட்டுறவு சொசைட்டி போன்ற மிக நல்ல நிதிநிறுவனத்தை தனிப்பட்ட வெறுப்பு/ குரோதத்தினால் சீரழிக்க முயல்வதை அனைத்து சங்கங்களும் ஒன்றுபட்டு முறியடிப்பது. 
5. தொழிற்சங்க அங்கீகாரத்தை 2004 முதல் கையில் வைத்துக் கொண்டு ஊழியரின் உரிமைகள் ஒவ்வொன்றாய் பறிகொடுத்த கையாலாகாத BSNLEU சங்கம் தாமதமாகும் மூன்றாவது ஊதிய மாற்றம் , நிர்வாகத்தின் ஆட்குறைப்பு திட்டம் மற்றும் அரசின் சீர்குலைக்கும் நடவடிக்கைகள் போன்ற முக்கிய பிரச்சினைகளில் தனது படுதோல்வியை மூடிமறைக்க- எதிர்வரும் எட்டாவது அங்கீகார தேர்தலில் ஆதாயம் பெற ஊழியரின் கவனத்தை உயிர்ப் பிரச்சனைகளில் இருந்து திசைதிருப்பவே டெலிகாம் கூட்டுறவு சொசைட்டி நிர்வாகத்தின் மீது பொய்ப் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளது. இதை அனைத்து ஊழியரிடமும் அம்பலப்படுத்த தீவிர பிரச்சாரத்தில் நமது கூட்டணிக் சங்கங்கள் ஈடுபடவேண்டும்.

No comments:

Post a Comment