Saturday, 29 December 2018


NFTE மத்திய சங்கத்தின் சிறுபிள்ளைத்தனமான செய்கை:

என்னிக்கு நீங்க மாறப்போறிங்க தோழர்.சிங் அவர்களே!!

28-12-2018 அன்று சென்னை தொலைபேசி மாநில ஏ.யூ.ஏ.பி. ஏற்பாடு செய்த பிரம்மாண்டமான கூட்டம் தோழர் சி.கே.எம் அவர்களின் தலைமையில் பூக்கடை வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. அதே நாளில் தமிழ்நாடு மாநில ஏ.யூ.ஏ.பி. சார்பில் கிரீம்ஸ்ரோடு வளாகத்திலும் ஒரு கூட்டம் தோழர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது. இவ்விரு கூட்டங்களிலும் தோழர்கள் சந்தேஷ்வர் சிங் , அபிமன்யு உள்ளிட்ட பல தலைவர்கள் பேசினர். இவ்விரு கூட்டங்கள் குறித்த தகவல்கள் NFTE மற்றும் BSNLEU மத்திய சங்கங்களின் இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் NFTE / CHQ இணையதளத்தில் மட்டும் பிரம்மாண்டமாக நடைபெற்ற சென்னை தொலைபேசி ஏ.யூ.ஏ.பி. கூட்டம் பற்றிய தகவல்களில் வேண்டுமென்றே தோழர் சி.கே. மதிவாணன் அவர்களின் பெயர் இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளது மிக மிக சிறுபிள்ளைத்தனமானது. தங்களுக்கு ஜால்ரா தட்டவும் - கூஜா தூக்கவும் மறுப்பதால் நாட்டிலேயே மூத்த மாநிலச் சங்க செயலாளரும் மத்திய சங்கத்தின் மூத்த துணைத் தலைவருமான ஒரு தலைவரையே இவ்வாறு இருட்டடிப்புச் செய்யும் சின்னபுத்திக்காரர்கள் உண்மையில் நாடுநெடுக இருக்கும் தோழர் சி.கே.எம். அபிமானிகளை - ஆயிரக்கணக்கான NFTE தோழர்களை ஆத்திரம் கொள்ள தூண்டுகிறார்கள். இதன் விளைவை அவர்கள் நிச்சயமாக எதிர்கொள்வார்கள். NFTE சங்கத்தை தமது சுயலாபத்திற்காக பயன்படுத்தும் இப்பேர்வழிகளின் பின்புலம் கம்யூனிஸ்ட் கட்சி என்பது தான் நம்மை வருத்தமடைய செய்கிறது. தமிழ்நாடு/ சென்னை தொலைபேசி மாநிலங்களில் எப்பாடுபட்டாவது NFTE பேரியக்கத்தை சீரழிப்பது என்று சபதம் ஏற்று செயல்படும் கேவலமான அணுகுமுறையால் இந்த கருத்துக் குருடர்கள் மாற்றுச் சங்கங்கள் செய்ய இயலாததை செய்து முடிப்பார்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை.தோழர் சி.கே.மதிவாணனின் நற்பெயருக்கும் புகழுக்கும் இத்தகைய ஈனப்பிறவிகளால் ஒருபோதும் களங்கம் ஏற்படுத்த முடியாது.

No comments:

Post a Comment