Monday, 1 October 2018

BSNL துவங்கிய நாள்(1-10-2000) இன்று  வயது 18 .....

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் துவங்கிய நாள் முதல் இன்று வரை பல்வேறு இன்னல்களுக்கு ஆட் படுத்தப்பட்டாலும் இந்த அரசாங்க சேவை என்பது சிறிதளவும் மக்களிடத்தில் தன் பங்கை செலுத்த தவறியதில்லை . எப்போதெல்லாம்  மக்கள் துன்பத்திலும் துயரத்திலும் பேரிடரில் பாதிக்கப்பட்டாலும் அங்கு துணை நிற்கும் ஒரே தோழன் நமது  பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் மட்டுமே .
எத்தனையோ அரசாங்கங்கள் இதை அழிக்க நினைத்திருக்கலாம் ஆனால்  அவர்களை புறம் தள்ளி, "ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை ; என்பதற்கு ஏற்றார்போல் என்றும் எங்கும் பட்டொளி வீசி பறக்கும் ஒரே நிறுவனம் தான் மக்களின் நிறுவனமான பிஎஸ்என்எல். இந்த நிறுவனத்தை அழிக்க பல போட்டி நிறுவனங்கள் வந்தாலும் இந்த அரசாங்கத் துறையை மக்களாகிய நாம்தான் பாதுகாக்க வேண்டிய அவசியம் இருக்கிறது இன்றும் மத்திய அரசாங்கம் நினைத்தால் அனைத்து மத்திய அரசு அலுவலகங்களிலும் மத்திய அரசு நிறுவன ஊழியர்களும் பிஎஸ்என்எல் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று கட்டளை இட முடியும் .அதுபோல் அனைத்து மாநில அரசு அலுவலகங்களும் ஊழியர்களும் பிஎஸ்என்எல் சேவையை பயன்படுத்தினாலே போதும் இந்த நிறுவனம் காக்கப்படும். காக்க வேண்டிய அரசே தனியாருக்கு துணைபோனால்  மக்கள் சக்தி மட்டுமே அந்த அரசாங்கத்தின் சூழ்ச்சியை உடைத்தெறிய முடியும் ஒன்றாய் பிஎஸ்என்எல் வளர்ச்சிக்கு கரம் கோர்ப்போம் .பிஎஸ்என்எல் காப்போம் பிஎஸ்என்எல் நாம் வாழ்வில் உற்ற தோழனாய் என்றென்றும் காக்கும்

No comments:

Post a Comment