Sunday, 2 September 2018

WELCOME SEPTEMBER! THINK ABOUT PLI AT LEAST NOW:

வருகவே செப்டம்பர் மாதம்..போனஸ் பற்றி இப்போதாவது சிறிது நினைப்போமா?



 BSNL  நிர்வாகம் இருக்கக்கூடிய அனைத்து வேலைகளையும் பிற கம்பெனிகளுக்கு தர இருப்பதை கடுமையாக எதிர்க்கிறோம். ஒருபக்கம் BSNL  நிதிச்சுமையால தள்ளாடுகிறது சம்பளம் குடுக்கவே வழி இல்லை என்று புலம்புகின்றனர். அதே சமயத்தில் ITS அதிகாரிகள் விமான பயணம் முதல் வகுப்பில் சென்று வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் BSNL முகவர்களுக்கும் வியாபாரிகளுக்கும் தாய்லாந்து மற்றும் பாங்காக் செல்ல பணத்தினை வாரி இறைக்கின்றனர்.


 ITS அதிகாரிகள் அனைவருக்கும் மத்திய அரசின் எழாவது சம்பள கமிஷன்படி 2016 -ல் புதிய சம்பளவிகிதம் அமைத்து அமுல்படுத்தும் அதேநேரம் சாதாரண காண்டிராக்ட் தொழிலாளிக்கு மாதம் 7ம் தேதி சம்பளம் கொடுக்க மறுக்கின்றனர். இன்றுவரை நிறைய ஒப்பந்த ஊழியர்கள் ஜூன் ஜூலை சம்பளம் வாங்காமல் இருக்கும் அவல நிலை பல இடங்களில் உள்ளது.

கார்ப்பரேட் அலுவலக அறிவுறுத்தல் படி மத்திய அரசில் பணிபுரியும் நான்காம் ஊழியருக்கு இணையான சம்பளம் காசுவல் ஊழியருக்கு தரப்படவேண்டும் என்ற உத்தரவு இருந்தும் அது பெறமுடியாத அவலநிலைதான் இன்றும் உள்ளது வெட்கக்கேடு! இது பற்றி எதுவும் செய்யாமல் இருக்கும் அங்கீகரிக்கபட்ட சங்கங்களைப்பற்றி அந்த தொழிலாளி முணுமுணுத்துக் கொண்டே தனது வேலையை செய்கிறான்.


கடந்த வாரம் தோழர்.அபிமன்யு தனது சங்கத்தின் மாநிலச் செயற்குழு கூட்டத்தை வெகு ரகசியமாக சென்னை தொலைபேசியில் நடத்தியதாக தகவல் கிடைத்தது. அந்த கூட்டத்தில் பங்கேற்ற சில தோழர்கள் மூலமாக தோழர்.அபிமன்யூ BSNL மிக நெருக்கடியில் இருப்பதாகவும் கடந்த ஒன்பது வருடங்களாக லாபம் இல்லாமல் செயல்படுகிறது எனவும் தெரிவித்தாக கூறினர். இதிலிருந்து அவர் ஏன் போனஸ் குறித்து மவுனம் சாதிப்பதும் அதுவும் 2013 முதல் அதற்கான் பார்முலாவை கொண்டுவர எந்த முயற்சியையும் செய்யாதது ஏன் என்றும் புரிகிறது.

NFTE சங்கம் அங்கீகாரம் பெற்றபிறகே உற்பத்தியுடன் இணைந்த போனஸ் பார்முலா உடனடியாக அமைக்கப்பட வேண்டும் என்ற குரல் எழுப்பியது. தேவையில்லாமல் இன்னமும் இதனை  ஐந்து வருடமாக காலம்தாழ்த்துவது நியாயப்படுத்த முடியாது. 

ஆனால் ஊழியர் பதவிகளின் பெயரை மாற்றுவதற்கு மட்டும் சங்கங்கள் மிக அற்புத முயற்சி எடுத்து அதே சமயத்தில்  போனஸைப் பற்றி எந்த முயற்சியையும்  எடுக்காததை பற்றி  என்ன சொல்வது?

-கட்டுரை வடிவம்: தோழர்.மதிவாணன் .           மாநிலச் செயலர் NFTE-BSNL CHENNAI TELEPHONES

No comments:

Post a Comment