Friday, 7 September 2018

Thursday, 6 September 2018

Meeting with Director ( PSU) :

 :டைரக்டர் (பொது துறை நிறுவனங்கள்) சந்திப்பு:

நேற்று 05-09-2018  NFTE- BSNL அகில இந்திய தலைவர் மற்றும் பொதுச் செயலர் இருவரும் டைரக்டர் (பொதுத்துறை) தொலைதொடர்பு பகுதி அவர்களை சந்தித்து புதிய சம்பள விகிதம் அமைப்பதற்கான சிறப்பு அமைச்சக தளர்வு குறிப்புகள் இதுவரை தயார் செய்யப்படவில்லை என்பதை கேட்டு அறிந்தனர். அமைச்சகத்தின் இந்த குறிப்பிற்கு பிறகே புதிய சம்பள பேச்சு வார்த்தை நடைபெறும் என்பதை அனைவரும் அறிவர்.

நம்முடைய அதிகாரிகள் மற்றும் ஊழியர் கூட்டமைப்பின் சார்பாக தொலைதொடர்பு அமைச்சர் திரு.மனோஜ் சின்ஹா அவர்களை பிப்ரவரி மாதம் சந்தித்தபோது அமைச்சரவைக்கான குறிப்பு மார்ச் 2018 இறுதிக்குள் அனுப்பப்பட்டு ஒப்புதல் பெறப்படும் என்ற தகவல் கிடைத்தது. ஆனால் ஆறு மாதங்கள் ஆகியும் ஒரு இன்ச் கூட முன்னேற்றமில்லை அதே நிலை தொடர்கிறது. இதுகுறித்து தலைவர்கள் பலமுறை சந்தித்து முயற்சித்தபோது எந்த முன்னேற்றமுன் இல்லை. 

அரசியல் வட்டாரத்தில் பார்லிமெண்ட் தேர்தல் வரும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலத் தேர்தலுடன் நடத்தப்படலாம் என்ற வதந்தி பரவலாக கேட்கப்படுகிறது.  இது போன்ற சூழலில் அதிகாரிகள் மற்றும் ஊழியருக்கான புதிய ஊதிய நிர்ணயம் அமைப்பதில் இன்னும் காலதாமதம் ஆகலாமோ என்ற கவலை அனைவரையும் சூழ்ந்துள்ளது. நமக்கு புதிய சம்பள விகிதம் 01-01-2017 அன்று கிடைத்திருக்கவேண்டும். ஏனென்றால் 2007 ஊதிய பேச்சு வார்த்தை நடத்தி 10 வருடம் கழித்து புதிய ஊதிய பேச்சு வார்த்தை என்ற உறுதிமொழி அரசு அளித்ததாக அன்று ஒப்பந்தம் போட்ட BSNLEU தலைவர்கள் கூறினர்.  அது என்ன ஆனது என்று பதிலில்லை. 

இனியும் தாமதம் செய்திடாமல் (ஏற்கெனவே 20 மாதம் ஆகிவிட்டது) நாம் போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும். இல்லையென்றால் அரசு தேர்தலை காரணம் காட்டி தப்பிக்க முயலலாம்!!

No comments:

Post a Comment