Monday, 17 September 2018

         ஏன் இந்த அவசரம்?

சில தோழர்கள் இன்னும் ஊதிய பேச்சு வார்த்தை முடிந்து 15 சதவீதம் நிர்ணயம் பற்றி எந்த முடிவும் எடுக்காத சூழலில் “உங்களுக்கு எவ்வளவு புதிய சம்பளம் கிடைக்கும்” என்ற கணக்கு வழிமுறைகளை கூறியுள்ளனர். ஏன் எதுவுமே முடியாத போது இவ்வாறு ஒரு எதிர்பார்ப்புக்கு ஊழியர்களை உள்ளாக்குவது சரியா?. கோழி முட்டை இடுவதற்கு முன் எவ்வளவு முட்டை போடும் என்று எண்ணுவது போல் இது உள்ளது.

இதனால் ஊழியர்கள் நிச்சயமாக குழப்பம் அடைவார்கள். நம்முடைய பெரிய தடை இதுவரை மத்திய அமைச்சரவை  “தொடர்ச்சியாக மூன்று வருடம் லாபத்தில் இயங்காவிட்டாலும் BSNL -நிர்வாகம் புதிய சம்பள விகிதம் அமைப்பதில் எந்த சிக்கலும் இல்லை” என்ற முடிவினை எடுக்கவில்லை. கடந்த முறை நாம் நிர்வாகத்தை சந்தித்தபோது DOT இதற்கான குறிப்பினை தயாரித்து அமைச்சரவைக்கு 30-03-2018க்குள் அனுப்பிவிடும் என்ற நம்பிக்கையை கொடுத்தது. ஆனால் இதுவரை இந்த குறிப்பு அனுப்பப்படவில்லை என்பதே நிஜம்.
இந்த சூழ்நிலையில் இதற்கு அமைச்சரவை எத்துணை நேரம் எடுத்துக் கொள்ளும் என்று தெரியவில்லை. இந்த நிலைமையில் “இந்தா கணக்கீடு, உனக்கு அடிப்படை சம்பளம் இவ்வளவு, பார்த்துக் கொள்”என்று கூறுவது எந்த விதத்தில் சரியாக இருக்கும் என்று தெரியவில்லை.

அதற்கு பதிலாக் நாம் ஊழியரை திரட்டி தேவையில்லாமல் தாமதம் ஆகும் புதிய சம்பள விகிதம் மற்றும் சலுகைகள் 1-1-2017 முதல் பெற போராட வேண்டும். அதற்கு நாம் தயாராகவேண்டும். சங்கங்கள் இதற்காக கூட்டங்கள் மற்றும் போராட்ட யுக்திகளை தயார் செய்வது மட்டுமே இந்த சமயத்தில் சரியான ஒன்றாய் இருக்கும்.

தோழர்.சி.கே.மதிவாணன், மாநிலச் செயலர், சென்னை தொலைபேசி, 16-09-2018

1 comment:

  1. The RRB Bhopal Group D CBT Exam starts from 17th September 2018 to 14th September 2018. The Exam will be conducted in three shifts. It is expected that around 2.1 Crore candidates will be appearing the Railway Group D Exam 2018. The RRB Chennai Group D CBT Exam starts from 17th September 2018 to 14th September 2018. The Exam will be conducted in three shifts. It is expected that around 2.1 Crore candidates will be appearing the Railway Group D Exam 2018.

    ReplyDelete