Friday, 15 June 2018

BSNL நிர்வாகம் மற்றும் தொழிலாளர் சங்கங்கள் இவர்களை கலந்து ஆலோசிக்காமல் மோடியின் அரசு தன்னிச்சையாக 66000 டவர்களை ஒன்றிணைத்து ஒரு டவர் கம்பெனி அமைத்தது அனைவருக்கும் ஞாபகம் இருக்கலாம்.. ஒருவருடம் ஆகிறது...இந்த முடிவை எடுத்த மத்திய அமைச்சரவைக்கு எந்த ஒரு முகாந்திரமும் கிடையாது என்பதே உண்மை. அதனுடைய முழு எண்ணமே அப்படியே BSNL- டவர்களை தூக்கி அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ வசம் ஒப்படைக்க வேண்டும் என்பதே ஆகும்.

 அனைத்து சங்கங்கள் மற்றும் அதிகாரிகள் கூட்டமைப்பு   BSNL ( AUAB) இதனை மிகக் கடுமையாக எதிர்த்தது. இதற்கான அறிவிப்பு வெளியிட்டது முதற்கொண்டு தொடர்ச்சியான போராட்டங்களை செய்தும் வந்தது. ஆனால் மோடி அரசு இதற்கெல்லாம் அசையக்கூட இல்லை, ஊழியர்கள்/அதிகாரிகள் கோரிக்கைகளை  மோடி அரசு சட்டை செய்யவில்லை. 04-01-2018 அன்று இதற்கான் தனி டவர் கம்பெனி அமைக்க பதிவு செய்யப்பட்டது. அவசரம் அவசரமாக ஒரு  IAS ஆபிசரை  CMD-ஆக நியமித்தது. ஆனால் இன்னும் வேலையை தொடங்கவில்லை. இதனை எதிர்த்து அனைத்து ஊழியர் அதிகாரிகள் கூட்டமைப்பு டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த வழக்கு நீதிமன்றத்தில் ஏற்கப்பட்டுள்ளது. இதற்கான அமர்வு வரும்  25-09-18 அன்று விசாரிக்க உள்ளது.

நீதிமன்ற தீர்ப்பு வரும்வரை அரசு இந்த விஷயத்தில் எந்த முடிவும் எடுக்க முடியாது. நீதிமன்றம் அமைச்சரவை முடிவில் தலையிட முடியாது என்று மோடி அரசு கூறிக்கொண்டு எந்த அவசர முடிவிற்கும் போகாது என்று நினைக்கிறோம்.

ஆனால் மோடி சட்டத்திற்கு மேலானவர் ஆயிற்றே!! ஆதலால் என்ன நடக்கும் என நம்மால் கணிக்க முடியவில்லை. ஆனால் தோழர் ஒருவர் ”ஒரு கம்பெனி பதிவு செய்து 6 மாதத்திற்கு அது தொழிலை தொடங்கவில்லை என்றால் அதன் பதிவு செல்லாது” என்ற ஒரு செய்தியை சொன்னார்.

அப்படி பார்க்கும்போது டவர் கம்பேனி பதிவு செய்து வரும் ஜூலை மூன்றோடு ஆறுமாதம் முடிகிறது  என்ற செய்தி நமக்கு சிறிது நம்பிக்கையை தருகிறது.  நடப்பது நல்லாதாகவே நடக்கும் என்று நம்புவோமாக!1


கட்டுரை: தோழர் சி.கே.மதிவாணன் முகநூல் பதிவிலிருந்து 14-06-2018

No comments:

Post a Comment