Thursday, 7 June 2018

தன்மானமே உன் விலை என்ன?

மனிதனின் அறவாழ்க்கைக்கு தன்மானம் மிகப் பெரிய அளவுகோல் !

தனக்கு சொந்தமானதையும் தன்னால் பிறப்பிக்கப்பட்ட படைப்புகளையும்  தனது என்று உரிமை கொண்டாடுவது எந்த அளவிற்கு தன்மானத்திற்கு அடையாளமோ அந்த அளவிற்கு தனது அல்லாததை இது எனது அல்ல என்று சொல்வதற்கும் ஒரு மன பலம் தேவை.

தன்னால் எதிர்க்கப்பட்ட தனக்கு சம்பந்தமே இல்லாத பென்ஷன் போராட்டத்திலேயே பென்ஷன் நான் தான் பெற்றுக் கொடுத்தேன் என்று கூச்சமில்லாமல் கூறியது BSNLEU சங்கம். அன்றைக்கே நாம் சொன்னோம் “ஊரான் பிள்ளை என் பிள்ளை” என்று சொந்தம் கொண்டாடாதே என்று.  இன்றைக்கும் அவர்கள் மாறவில்லை.  அகில இந்திய கவுன்சில் சார்பாக ஊழியர்கள் அனைவருக்கும் 429 PALN  அடங்கிய சிம் கார்டு வழங்க வேண்டும் என்று  வலியுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் அதற்கான உத்தரவு வந்தவுடன் சற்றும் தயங்காமல் அது தன்னால் பெறப்பட்டதாக நோட்டீசு அடிக்கும் அளவிற்கு சிந்தனையற்றுப்போய் இருக்கிறது BSNLEU சங்கம்.  கூரம்பாயினும் வீரியம் பேசேல்  நம் கையில் கூர்மையான அம்பே இருந்தாலும் கூட நீ வீரியம் பேசாதே - என்னால் முடியும் என்று கூவாதே - நான் தான் வீரன் என்று பிதற்றாதே என்று கூறுகிறது நமது நீதி நெறி நூல்.  ஆனால் கூர்மை மழுங்கிப் போய் நிற்கும் நீ, எந்த போராட்டம் செய்தாலும் NFTE துணை கிடைக்குமா?   நிர்வாகத்தை எதிர்த்துப்போராட  C.K. மதிவாணனும் அவர் தம் போர்ப்படையும் தமக்கு துணைவருமா?  என்று ஏங்கி நிற்பதை ஊர் அறியுமே !   இந்த நேரத்தில் இப்படி ஒரு போஸ்டர் அடிக்கலாமா?  "இது குழந்தைத்தனமான செயல்" என்று கெளரவமாக வர்ணித்துள்ளார் என் தலைவர். ஆனால் உண்மையில் பார்த்தால் இது ஒரு மானமற்ற செயல்....  திருந்தட்டும் இனியாவது..    BSNLEU சங்கம் நாகரீக நகர்வு நோக்கி வரும் என்று எதிர்பார்ப்போம்.
  நன்றி: NFTE வடசென்னை மாவட்டம்.

No comments:

Post a Comment