Tuesday, 30 January 2018


நம்பிக்கையுடன் முன்னேறுவோம்: மாநிலச் செயலரின் செய்தி

இன்று முதல் (30-01-2018)  BSNL-ல் பணிபுரியும் அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஐந்து நாள் ஒத்துழையாமை இயக்கம் மற்றும் விதிப்படி வேலை போராட்டத்தை துவக்குகின்றனர்.

 மூன்றாவது ஊதிய கமிஷன் உட்பட நான்கு முக்கிய கோரிக்கைகள் நிறைவேற கோரி இப்போராட்டம் தொடங்குகிறது. பத்து வருடங்கள் நாம் காத்திருந்து 01-01-2017 முதல் நமக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய ஊதியம் கிடைக்காமல் இருப்பது இப்போராட்டத்தின் முக்கிய கோரிக்கையாகும்.
11 வருடங்களாக நாம் ஊதிய மாற்றத்திற்காக காத்திருந்தும் தொடர்ச்சியாக மூன்று வருடங்கள் லாபம் ஈட்டினால் மட்டுமே ஊதிய மாற்றம் என்ற நிர்வாகத்தின் நிபந்தனை ஏற்ககூடியதல்ல. பொதுத்துறை நிறுவனங்களின் உயர்மட்ட அமைப்பு (DPE)  தொலைதொடர்பு இலாகாவிற்கு புதிய சம்பள மாற்றத்திற்கான வழிகாட்டுதலை பலமாதங்கள் முன்னதாகவே அளித்திருந்தும் இதுவரை அதற்கான ஊழியர் தரப்பை உள்ளடிக்கிய கமிட்டியோ அதற்கான அறிவுறுத்தலோ
BSNL நிர்வாகத்திற்கோ தரப்படவில்லை.  ஆனால் தொலைதொடர்பு இலாக்கா (DOT ) BSNL-ல் பணிபுரியும்
ITSஆபிசர்களூக்கு சம்பள உயர்வு மத்திய அரசின் 7வது ஊதியகுழு பரிந்த்துரைப்படி அளித்துவிட்டது. அதை அளிக்கும்போது
BSNLசெலவிடும்நிலை பற்றியோ அந்த தொகையை தனது நிதியிலிருந்து கொடுப்பதைப்பற்றியோ சிறிதும் கவலைப்படவில்லை. நாம் நமது எதிர்ப்பை பலவிதமாக தெரிவித்தும் அரசு தனி டவர் கம்பெனி அமைப்பதைபற்றி சிறிதும் பொருட்படுத்தவில்லை. 66000  BSNL டவர்களை இணைத்து தனிடவர் கம்பெனி பிடிவாதமாக அமைக்கத் தயங்கவில்லை. இதனால்
 BSNL எதிர்காலம் அபாயகட்டத்தை நோக்கி நகரத்துவங்கும் என்பது உண்மை.

மிகவும் பிடிவாதமாகவும் உணர்ச்சியற்றதாகவும் உள்ள நமது அரசு மற்றும் நிர்வாகத்தினை எதிர்த்து அதிகாரிகளும் ஊழியர்களூம் ஒரு நீண்ட நெடிய போராட்டத்தை நடத்திடவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். நாம் நடத்தும் சத்தியாகிரஹ போராட்டம் செயலற்ற போராட்டம் அல்ல மாறாக அது அரசினை எதிர்த்து நடத்தும் ஒரு கொரில்லா யுத்தம் ஆகும். ஆதலால் நமது கோரிக்கைகளை வென்றெடுக்க நாம் எத்தகைய போராட்டத்திற்கும் தயாராவோம்.

        போராட்ட வாழ்த்துக்களுடன்

சி.கே.மதிவாணன்
மாநிலச் செயலர் NFTE-BSNL


No comments:

Post a Comment