Sunday, 17 May 2015



வரலாற்றில் இன்று: மே 17
(Today in History for 17th May)

1498 – வாஸ்கொடகாமா இந்தியாவின் கோழிக்கோட்டை அடைந்தார்.

1521 – பக்கிங்ஹாமின் மூன்றாவது நிலை சீமானான (Duke) எட்வேர்ட் ஸ்டாஃபேர்ட் தூக்கிலிடப்பட்டான்.

1590 – டென்மார்க்கின் ஆன் ஸ்கொட்லாந்து அரசியாக முடி சூடினாள்.

1792 – நியூ யோர்க் பங்குச் சந்தை ஆரம்பிக்கப்பட்டது.

1809 – பிரெஞ்சுப் பேரரசுடன் இத்தாலியின் திருச்சபை நாடுகளை இணைக்க முதலாம் நெப்போலியன் ஆணையிட்டான்.

1814 – நோர்வே நாட்டின் அரசியல் நிர்ணயம் அமைக்கப்பட்டது.

1846 – அடொல்ஃப் சாக்ஸ் என்பவரால் சாக்சபோன் வடிவமைக்கப்பட்டது.

1865 – அனைத்துலகத் தொலைத் தொடர்பு மையம் ஏற்படுத்தப்பட்டது. இது பின்னர் அனைத்துலகத் தொலைத்தகவல் தொடர்பு மையம் எனப் பெயர் மாற்றம் பெற்றது.

1915 – பிரித்தானியாவின் கடைசி லிபரல் கட்சி ஆட்சி வீழ்ந்தது.

1940 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனி பெல்ஜியத்தின் பிரசல்ஸ் நகரைக் கைப்பற்றியது.

1969 – சோவியத்தின் வெனேரா 6 விண்கலம் வீனஸ் கோளின் வளிமண்டலத்துள் சென்று வீனசில் மோத முன்னர் வளிமண்டலத் தரவுகளை பூமிக்கு அனுப்பியது.

1974 – அயர்லாந்தில் டப்ளினில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 33 பேர் கொல்லப்பட்டனர்.

1983 – லெபனானில் இருந்து இஸ்ரேல் வெளியேறுவதற்கான உடன்பாடு லெபனான், இஸ்ரேல், ஐக்கிய அமெரிக்கா ஆகியவற்றுக்கிடையில் எட்டப்பட்டது.

1998 – தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாழ்ப்பாண நகர முதல்வர் சரோஜினி யோகேஸ்வரன் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

2006 – தமிழ்த் தொலைக்காட்சி நடிகை ஷ்ரத்தா விஸ்வநாதன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

2009 – தமிழினப் படுகொலை நாள். வன்னிப் போரில் பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்கள் இலங்கை அரசபடைகளால் படுகொலை செய்யப்பட்டனர். நான்காம் கட்ட ஈழப்போர் முடிவுக்கு வந்தது.

பிறப்புகள்

1749 – எட்வர்ட் ஜென்னர் – ஆங்கில மருத்துவ ஆராய்ச்சியாளர் (இ. 1823).

1888 – டைச் பிரிமென், ஆங்கிலேயத் துடுப்பாளர்
(இ. 1965).

1920 – பி. சாந்தகுமாரி, நடிகை, பாடகி.

1945 – பி. சி. சந்திரசேகர், இந்தியத் துடுப்பாளர்.

1967 – முகமது நசீது, மாலைதீவின் 4வது அரசுத்தலைவர்.

1974 – செந்தில் ராமமூர்த்தி, அமெரிக்க நடிகர்.

இறப்புகள்

1961 – மைசூர் வாசுதேவாச்சாரியார், கருநாடக இசைப் பாடகர் (பி. 1865).

2006 – ஷ்ரத்தா விஸ்வநாதன், தமிழ்த் தொலைக்காட்சி நடிகை.

2007 – நகுலன், தமிழ் எழுத்தாளர்.

2014 – சி. கோவிந்தன், தமிழறிஞர், புலவர்.

சிறப்பு நாள்

உலகத் தொலைத்தகவல் தொடர்பு நாள்.

நோர்வே – அரசியல் நிர்ணய நாள்.

No comments:

Post a Comment