Sunday, 22 March 2015

என் மனம் சில  ஆண்டுகள் பின் சென்றது 
அன்று நாட்குறிப்பு நகரத் துடித்து நின்றது 
1931 மார்ச் 23 ஐக் காட்டியது 


பாரதத் தாயின் கை விலங்கு கண்டு 
பதை பதைத்து உளம் வெகுண்டு 
பரங்கியர் சட்டமன்றம் நடுவினிலே 
வெடிகுண்டு வீசி சினம் தணிந்தவன் 
வீரத் தாய் பெற்ற தவப் புதல்வன் 
பஞ்சாப் சிங்கம் பகத் சிங் 
அஞ்சா நெஞ்சுறுதி கொண்டோன் 
அன்று அமைதியாய் புத்தகத்தில் ஆழ்ந்திருந்தான் 
முகத்தில் படர்ந்த சாந்தம் 
உளத்திலோ நிறைந்த பெருமிதம் 
ஆம்! அன்று பாரதத் தாயின் துயர் துடைக்க 
அவன் உயிர் துறக்கும் நாள் அல்லவா! 

தூக்கிலிடப்பட்டான் பகத்சிங் 
துடித்து அழுதாள் பாரதத் தாய் 
தன் பாசறையில் வளர்ந்த வீர மகன் 
பரங்கியர் என்னும் பாதகர்களால் 
பலியிடப்பட்ட நிகழ்வு கண்டு 
பகத்சிங் என்னும் எரிமலை அணைந்தது 
வீர சுதந்திரம் விண்ணை முட்டி எரிந்தது 








மாவீரன் பகத்சிங் நினைவு நாள் கூட்டம்



நாள்:  23-03-2015
இடம்: சென்னை பூக்கடை தொலைபேசி வளாகம்
நேரம்: சரியாக 11மணி



தலைமை

 தோழர்.சி.கே.மதிவாணன்.  மாநிலச் செயலர் NFTE-BSNL


நினைவேந்தல்

தோழர்.D.லெனின் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி CPI)

தோழர்.V.தருமதாஸ் (அஞ்சல் ஊழியர் சங்கத் தலைவர் NFPE)



அனைத்து தோழர்களும் தவறாமல் பங்கேற்க வேண்டுகிறோம்



சென்னை தொலைபேசி மாநிலம்   NFTE-BSNL


No comments:

Post a Comment