Saturday, 28 February 2015

அமைதியில் ஆழ்கடல் முத்தானவன்
அதனால் அமைதி போராளியானவன்

சங்கக் குறுஞ்செய்தி அனுப்புவதில் பித்தானவன்
செயலிலே BSNL சொத்தானவன்

என்புதோல் தேகத்தில் இளமையானவன்
பண்புசொல் பழக்கத்தில் இனிமையானவன்

குறுந்தாடி வைப்பதில் குழந்தையானவன்
குற்றமில்லா நட்புகளை கொண்டாடுபவன்

பாசமிகு சாந்தியின் துணைவனானவன்
நேசமிகு இருகுழந்தைகளின் தந்தையானவன்

உறுதிமிக்க உடல் கொண்டு....
அன்புமிக்க மனம் கொண்டு...
பல்லாண்டு..பல்லாண்டு..
பலகோடி நூறாண்டுகள்

வாழ்க!  வாழ்க!!

No comments:

Post a Comment