Sunday, 15 July 2018

NFTE பொதுச்செயலருக்கு ஒரு வேண்டுகோள்....
இன்று 14-07-18 சென்னை தொலைபேசி NFTE- BSNL சங்கத்தின் தலைமை செயலகக் கூட்டம் மாநிலத் தலைவர்  M. K.ராமசாமி அவர்கள் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மாநிலச் செயலர் சி.கே.மதிவாணன் டெல்லியில் நடைபெற்ற மாநிலச் செயலர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து விளக்கிப் பேசினார்.

அனைத்து சங்கங்கள் சார்பாக வரும் 24-07-18 முதல் நடைபெறும் தொடர் உண்ணாவிரத் போராட்டம் பற்றி குறித்து பேசிய அவர் அதில் நமது சங்கத்தின் பங்குபெற இருக்கும் 18 தோழர்களின் பெயர்களை அறிவித்தார்.

கூட்டத்தில் அனைத்து செயலக உறுப்பினர்களும் AUAB -ல் நடக்கின்ற முரண்பாடுகள அனைவருக்கும் தெரிய வந்தது குறித்து தங்களது கவலையையும் வருத்தத்தினையும் பதிவு செய்தனர். இந்த போராட்டத்திற்கான கடிதத்தினை CMD/ DOT  அளித்த  BSNLEU அகில இந்திய செயலர் அதில் FNTO & SEWA அகில இந்திய செயலரிகளின் ஸ்கேன் செய்யப்பட்ட கையெழுத்தினை பயன்படுத்தி கடிதம் கொடுத்தத்து அனைத்து சங்கங்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் என்ற கருத்தினை கூறினர். அதனாலேயே ஆர்ப்பாட்டத்தில் அந்த இரு சங்க தலைவர்களின் பங்களிப்பு இல்லாமல் போனது.

அதே சமயத்தில் அந்த இரண்டு தலைவர்கள் ஜெயப்பிரகாஷ் ராம் ஆகியோரி இதுகுறித்து நிர்வாகத்திற்கு தெரியபடுத்தி கடிதம் எழுதியது மிகப் பெரிய தவறு என அனைவரும் வருந்தினர். இந்த சூழலில் இன்று கூடிய செயலக குழு கீழ்காணும் வேண்டுகோளை அகில இந்திய செயலர் தோழர்.சிங் அவர்களுக்கு அனுப்புகிறது.

1. NFTE  சங்கம் உடனடியாக அனைத்து சங்கத் தலைவர்களை கூட்டி இதுகுறித்து விவாதித்து சங்கங்கள் இடையே ஏற்பட்டுள்ள முரண்பாட்டை நமது தொடர் உண்ணாவிரதம் தொடங்கும் முன் அதாவது 24-07-2018 முன் சரி செய்ய வேண்டும்.

2. அப்படி சரிசெய்யா முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் உடனடியாக இந்த போராட்டத்தை தள்ளி வைக்க வேண்டும்.

இந்த சமயத்தில் ஒற்றுமை என்பது மிக முக்கியமானது அதற்கு நமது சங்கம் முக்கிய பங்கினை வகிக்க வேண்டும் என செயலக கூட்டம் கருதுகிறது.

Wednesday, 11 July 2018


ஊதிய உயர்வு

 ஓய்வூதிய உயர்வு

ஓய்வூதியப்பங்களிப்பு

4G ஒதுக்கீடு

ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி
நாடு தழுவிய
ஆர்ப்பாட்டம்

11/07/2018 – புதன்கிழமை – மதியம் 1 மணி
தலைமை பொதுமேலாளர் அலுவலகம்
புரசைவாக்கம்
தோழர்களே… வாரீர்…
BSNL அனைத்து சங்க கூட்டமைப்பு

சென்னை தொலைபேசி


Tuesday, 10 July 2018

TSM நிரந்தரம். NFTE தனது முயற்சியை மீண்டும் துவக்கியது.

NFTE ( CHQ) 3000TSMs  பணிநிரந்தரம் ஆக்கப்பட வேண்டும் என்ற முயற்சியை திரும்பவும் தொடங்கியது. நீதிமன்றத்தின் தீர்ப்பினை தவறாக பயன்படுத்தி தற்காலிக ஊழியரை நிரந்தரம் ஆக்கும் பிரச்சனையை மூடுவிழா செய்த நமது நிர்வாகத்தின் முடிவினை எதிர்த்து நமது சங்கம் நிரந்தரம் ஆக்குவதற்கான முயற்சியை திரும்பவும் தொடங்கியுள்ளது. இதற்காக தோழர்.மதிவாணன் அவர்களுடன் தலைமை சங்க நிர்வாகிகள் மூத்த பொதுமேலாளர் ( Estt) அவர்களை அண்மையில் சந்தித்து பேசியதன் அடிப்படையில் இந்த முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. ஒன்பது வருடங்களாக தனிஒரு அங்கீகரிக்கப்பட்ட சங்கம் என்று மார் தட்டிய BSNLEU அங்கீரிககபட்டு இருந்த காலத்தில்தான் மூடுவிழா நடந்தது. இப்போது அவர்களை நிரந்தரம் ஆக்காமல் விடமாட்டோம் என்ற ,முன் முயற்சியினை தொழிலாளிகளின் சங்கமான நமது சங்கம்  NFTE தொடங்கியுள்ளது. .லட்சக்கணக்கான கேசுவல் ஊழியர்களை நிரந்தரம் ஆக்கிய குப்தாவின் வழிவந்த நமது சங்கம் மட்டுமே ப 3000 நிரந்தம் இல்லா TSMs  -களை நிரந்தரம் ஆக்கும். வெற்றி நிச்சயம்!!.

அடிக்க அடிக்க அம்மியும் நகரும்........

 21-10-2016 அன்று    BSNL Corporate அலுவலகம் அனைத்து முதன்மைப் பொது மேலாளர்களுக்கும்  அனுப்பிய கடிதத்தில், " ஒப்பந்த ஊழியர்களின் பிரச்னைகளை  அங்கீகாரச் சங்கங்கள் உட்பட எந்த சங்கத்திடமும் விவாதிக்கக் கூடாது"  என்ற    தொழிலாளர் நல சட்டங்களுக்கு எதிரான ஒரு படுமோசமான  உத்திரவினை வெளியிட்டது.

நாங்கள்தான் ஒப்பந்த ஊழியர்களின் பிரச்னைகளை தீர்க்க அவதாரம் எடுத்துள்ளோம் என்று வெட்டி விளம்பரம் செய்துகொள்ளும் சங்கங்கள் உட்பட அனைத்து சங்கங்களும்  இந்த  உத்திரவை எதிர்த்து எந்த எதிர்ப்பு நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்தன.,

 நிர்வாகம் இந்த உத்திரவினைப்பற்றி தேசிய கவுன்சிலில் விவாதிக்கக்கூட மறுத்தது. 

 ஒப்பந்த ஊழியர்களின்   நலன் காக்க புதியதாக அமைக்கப்பட்ட NFTCL , எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் இப்பிரச்னையை எதிர்த்து  நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டது.

 அகில இந்தியத் தலைவர் தோழர் ஆசிக் அகமது,  பொதுச் செயலர் தோழர் மதிவாணன், துணைப் பொதுச் செயலர் தோழர்  சுப்பராயன்,  தமிழ்நாடு மாநில செயல் தலைவர் தோழர்   மாரி,  மாநிலச் செயலர் தோழர்  ஆனந்தன்  ஆகியோர் 10/11/2016 அன்று டெல்லி் சென்ற போது,   மத்திய  தொழிலாளர் நலத் துறை அமைச்சர்  மற்றும் துணை தலைமை தொழிலாளர் ஆணையர் ஆகியோரை சந்தித்து   தொழிற்சங்க  சட்டத்திற்கு எதிரான இந்த   உத்திரவினை BSNL  நிர்வாகம் வாபஸ் பெற உத்திரவிட வேண்டும் என்றும் ஒப்பந்த ஊழியர்களிடம்  வேலையை பெற்றுக் கொள்ளும்  BSNLதான் Principal Employer  என்றும்  ஆகவே ஒப்பந்த ஊழியர்களுக்கான சட்டப்படியான சம்பளம் உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும்  உறுதி செய்யவேண்டிய கடமையும் கடப்பாடும் BSNL   நிர்வாகத்திற்கு உண்டு என்றும் ஒப்பந்த ஊழியர்களின் பிரச்னைகளை ஒப்பந்த ஊழியர்கள்   சங்கத்தோடு விவாதிக்க BSNL நிர்வாகத்திற்கு உத்திரவிடவேண்டும்  என்றும்          கடுமையாக  வாதாடினோம்.அந்த அடிப்படையில் BSNL   நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டது.

 
 3-7-2018 அன்று டெல்லியில் CLC அவர்களை தோழர்கள் மதிவாணன், ஆசிக் அகமது, ஆனந்தன் ஆகியோர் மீண்டும் சந்தித்து   உடனடியாக  உத்திரவினை வெளியிட வலியுறுத்தினர்.

அந்த அ்டிப்படையில் டெல்லி CLC அவர்கள், BSNL உத்திரவினை ரத்து செய்து உத்திரவிட்டுள்ளது  பெருமகிழ்ச்சி அளிக்கிறது.

இனி   நமது சங்கம் நிர்வாகத்தோடு  பதிவு செய்யப்பட்ட சங்கம் என்ற உரிமையோடு ஒப்பந்த ஊழியர்களின் பிரச்னைகளை எடுத்து தீர்க்க வழி பிறந்துள்ளது.

நிர்வாகத்தின் ஆணவப் போக்கிற்கு  சம்மட்டி அடி கொடுத்துள்ளோம்.

தொடர்ந்து போராடி, ஒப்பந்த ஊழியர்க்கான அனைத்து உரிமைகளையும் மீட்போம்.

Wednesday, 4 July 2018

NFTE-BSNL தற்காலிக நிலை மஸ்தூர்கள் பற்றிய டெல்லி பேச்சு வார்த்தை


டெல்லியில் நடைபெற்ற மாநிலச் செயலர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி நமது தலைவர்கள் சி.கே.மதிவாணன்,  சி.சிங் மற்றும் அஸக் முகமது மூவரும் இன்று பொதுமேலாளர் ( Establishment) திரு தியாகி அவர்களை காப்பரேட் அலுவலகத்தில் சந்தித்தனர்.

அவர்கள் சந்திப்பின்போது இதுவரை நிரந்தரம் செய்யப்படாத 3000 தற்காலிக மஸ்தூர்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் உத்திரவை மேற்கோள் காட்டி உடனடியாக மஸ்தூர்கள் விஷயத்தில் அது அமுல்படுத்திட வலியுறுத்தப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு வெளியான நாளில் இருந்து அனைத்து தற்காலிக நிலை மஸ்தூர்கள் நிரந்தரம்செய்யப்படவேண்டும். ஆனால் நமது நிர்வாகம் 10 வருடம் சேவை செய்த மஸ்தூர்களை கூட நிரந்தரம் செய்ய மறுத்து விட்டது . நமது உறுதியான நிலைபாட்டினை கண்ட பொதுமேலாளர் (( Estt) திரும்பவும் அந்த ஊழியர்களின் நிலை குறித்த முடிவினை மறுபரீசலனை செய்வதாக உறுதி அளித்தார்.

நாம் மீதம்இருக்கின்ற  அந்த 3000 TSM-களை நிரந்தரம் செய்யும்வரை ஓயமாட்டோம்.

Tuesday, 3 July 2018

  

 

REVISION OF SUBSCRIPTION OF MEMBERSHIP:

 Revision of Subscription of Membership of NFTE- BSNL was approved today by Dy. Labour commissioner. From now on the amount of monthly subscription will be 44 rupees as per the decision of Amritsar All India Conference.